ரஜினிகாந்திற்கு ஜோடி தீபிகா படுகோன்?

ekuruvi-aiya8-X3

unnamed-file-5ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்தை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம் தயாரிக்க உள்ளது. எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதன் பின்னர் ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், இந்த படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை வித்யா பாலன் மறுத்திருந்தார். இந்நிலையில் கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடித்த தீபிகா படுகோனை, ரஞ்சித் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment