ராஜாஜி ஹாலில் போலீசார் குவிப்பு – ஏடிஜிபி திரிபாதி ஆய்வு

sdsd

Rajaji_Hallமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்படுகின்றது.

ஜெயலலிதாவின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

காலை 4.30 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக ராஜாஜி ஹாலில் கூடுதல் டிஜிபி திரிபாதி, டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து ராஜாஜி ஹால் பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவில் அறிவிப்பு வெளியான நிலையில், காலை தொடங்கியதும் மக்கள் கூட்டம் இங்கு அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Post

Post Comment