ரெயில்வே பிளாட்பாரத்தில் மருத்துவக் கனவை தொலைத்த முன்னாள் ராணுவ வீரரின் மகன்

railway_platformவிழுப்புரத்தை சேர்ந்தவர் பூபதி ராஜா.  இவரது தந்தை முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர். பூபதி ராஜாவிற்கு 4 வயது இருக்கும்போது அவரது தந்தை உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தனது தாயின் அரவணைப்பில் பூபதி ராஜா வளர்ந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளியொன்றில்  பிளஸ் 2  முடித்தார். தொடர்ந்து  நீட் தேர்வு எழுதினார்.
அத்தேர்வில் 236 மதிப்பெண்களுடன் மாநில அளவில் 9,252 இடத்தினை பிடித்தார். பட்டியல் இனத்தவருக்கான (எஸ்.டி) இடஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் 629 இடத்தினை பிடித்துள்ளார். மேலும், அவருக்கு முன்னாள் ராணுவ வீரர் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பு கிடைக்க வாய்ப்புகள் இருந்தன.
இந்நிலையில் மருத்துவம் படிக்கும் கனவோடு அசல் சான்றிதழ்களுடன் சென்னை வருவதற்காக தனது மாமாவுடன் விழுப்புரத்தில் ரயில் ஏறியுள்ளார். முன்பதிவு செய்யாத காரணத்தால் கூட்ட நெரிசலில் நின்றுகொண்டே பயணித்து வந்துள்ளார். அதிகாலை 4.20 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையம் வந்திறங்கினர். மருத்துவ கலந்தாய்வு 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதிக நேரம் இருந்ததால் ரயில்வே பிளாட்ஃபாரத்தில் படுத்து உறங்கியுள்ளார்.
இதையடுத்து தூங்கி எழுந்தவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பை காணாமல் போயிருந்தது. அதில், அவரது 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ், நீட் மதிப்பெண் அட்டை மற்றும் தனது தந்தையின் ஓய்வூதியப் புத்தகம் மற்றும் சேவை பதிவுகள் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்கள் உள்ளிட்டவை இருந்துள்ளன.
இந்நிலையில் உடனடியாக ரயில்வே போலீசிடம் அவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் முதியவர் ஒருவர் பையினை திருடிச்செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து காலை 9 மணிக்கு ஓமந்தூரர் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெற இருந்தநிலையில், 11.15 மணிக்கு அங்கு போய் சேர்ந்தனர். ஆனால் அதற்குள் அங்கு கவுன்சலிங் முடிந்திருந்தது. தனது நிலைமை குறித்து மருத்துவக் கல்வி இயக்குனரிடம் பூபதி  எடுத்துரைத்தார். இதுகுறித்து நீதிமன்றம் மற்றும் மருத்துவ இயக்குநரகத்தின் ஆலோசனையின்படியே  செயல்பட முடியும் என மருத்துவ கவுன்செலிங் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Related News

 • ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமணம்
 • 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு
 • புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
 • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
 • நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி
 • நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
 • படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்
 • உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *