முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா

சபரிமலைக்கு செல்ல முயன்ற ரஹானா பாத்திமா, முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த ரஹானா பாத்திமா, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல முயன்றார். ஆனால், சன்னிதானம் முன் வந்தபோது, பக்தர்கள் திரளாக கூடி, அவர்களை தடுத்தனர்.

போலீஸ், ஐ.ஜி., ஸ்ரீஜித், போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார். போராட்டக்காரர்கள் பணியவில்லை. மேல்சாந்தி, தந்திரியை தவிர, மற்ற உதவி அர்ச்சகர்கள் அனைவரும் வேலையை புறக்கணித்து,18 படி முன் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். ”பெண்கள் படியேறி வந்தால், கோவில் நடையை அடைத்து, மேலாளரிடம் சாவியை கொடுத்து விட்டு செல்வேன்,” என, தந்திரி கண்டரரு ராஜீவரரு அறிவித்தார். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ரஹானா பாத்திமா திரும்பி சென்றனர்.

இந்நிலையில், கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில் தலைவர் ஏ. பூங்குஞ்ஜூ கூறியதாவது:

ரஹானாவின் நடவடிக்கைகள் லட்சக்கணக்கான இந்துக்களின் மனதையும், சடங்குகளையும் காயப்படுத்தி விட்டடார். எனவே, அவரையும், அவரது குடும்பத்தினரையும் , தள்ளி வைக்குமாறு, எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமாத் நாங்கள் கேட்டு கொண்டு உள்ளோம். முஸ்லிம் பெயரை பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்ததற்காக ரஹானா மீது ஐபிசி 153 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






Related News

  • அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்
  • அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி
  • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *