சிறந்த பெண்மணிக்கு மரியாதை செலுத்த வந்தேன் – ராகுல்காந்தி

Thermo-Care-Heating

JJ_Ragulமறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைந்ததையொட்டி அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி தமிழக மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக வந்தேன். ஜெயலலிதா ஒரு சிறந்த தலைவர். அவர் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லாமல் நாட்டுக்கே சிறந்த தலைவர். நான் காங்கிரஸ் கட்சி சார்பிலும், அதன் தலைவர் சோனியாக காந்தி சார்பிலும், அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள் சார்பிலும் இங்கு வந்து தமிழகத்தின் சிறந்த தலைவரும், சிறந்த பெண்மணியான மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எங்களுடைய மரியாதையை செலுத்த வந்தேன் என்று அவர் கூறினார்.

முன்னாள் மத்திய மந்திரிகள் குலாம்நபி ஆசாத், முகுல்வாசினிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உடனிருந்தனர்.

ideal-image

Share This Post

Post Comment