ராதாரவியுடன் நடித்தது பற்றி விஷால்

Thermo-Care-Heating

vishalகுட்டிப்புலி, கொம்பன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையாவின் அடுத்த படம் – மருது. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வைரமுத்து, யுகபாரதி ஆகியோரது பாடல்களுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ராதாரவியும் விஷாலும் இணைந்து நடித்துள்ளார்கள்.

‘மருது’ பட;த்தில் ராதாரவியுடன் கூட நடித்தது பற்றி விஷால்  கூறியதாவது:

முத்தையா என்னிடம் கதை சொன்னபோது அந்தப் பாத்திரத்துக்கு ராதாரவி அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும், உங்களுக்கு எப்படி என்று தயங்கியபடி கேட்டார். இதைக் கேட்க ஏன் தயக்கம்? யார் தேவையோ அவர்களை நடிக்க வையுங்கள், தயங்காதீர்கள் நடிக்கட்டுமே என்றேன். இதுவரை நாங்கள் இணைந்து நடித்ததில்லை, நடிக்கட்டுமே என்றேன்.

நடிகர் சங்கத் தேர்தல் பிரச்னையில், அவர் எதிர்தரப்பில் நின்றார் என்று பகைமை பாராட்டுவதும் அவர் முகத்தில் விழிக்கவே மாட்டேன் என்பதும் முட்டாள்த்தனம் என்பேன். நடிகர் சங்கத் தேர்தலில் அவர் ஒரு கோணத்தில் நின்றார்,நான் ஒரு கோணத்தில் நின்றேன், அவ்வளவுதான்.

அவர் என் படத்தில் நடிப்பது பற்றி படக்குழுவுக்கு மட்டுமல்ல வேடிக்கை பார்க்க வந்த மக்களுக்கும் கூட ஓர் எதிர்பார்ப்பு பரபரப்பு இருந்தது. ராதாரவி நாளைக்கு வருகிறார், இன்றைக்கு வருகிறார், என்ன நடக்கப்போகிறதோ என்று எதிரிகளைப் போல நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதை விறுவிறுப்புடன் எதிர்பார்த்தார்கள். ராதாரவி அண்ணன் வந்தார் நடித்தார். அவர் சிறந்த அனுபவம் உள்ள நடிகர்.

சங்கம் வேறு, நடிப்பு வேறு. சங்கம் வேறு, தொழில் வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. ராதாரவி அண்ணன் வந்தார். என்னைக் கட்டிப்பிடித்தார். ‘இப்போது நிறைய தொடர்ச்சியாக படங்கள் நடிக்கிறேன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.நடிகர் சங்கத்துக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் சொல்லுப்பா செய்றேன் ‘என்றார். அவர் ஒரு மூத்த நடிகர். அவர் மரியாதைக் குரியவர் என்பதை என்றும் நான் மறந்ததில்லை.

ideal-image

Share This Post

Post Comment