சசிகலா முதல் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ekuruvi-aiya8-X3

sasi_jj_1812ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்து உள்ளார்.
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை அவரது தோழி சசிகலா ஏற்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் வற்புறுத்தி வருகின்றனர். இதற்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த தீர்மான நகலுடன் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, போயஸ்கார்டனில் சசிகலாவை சந்தித்து தீர்மான நகலை வழங்கி வருகின்றனர்.
ஜெயலலிதா பேரவை  செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் இன்று பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு   சென்று அஞ்சலி செலுத்தினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். அங்கு நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பதுடன் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்த ஆர்.கே. நகர் தொகுதியில்    இடைத் தேர்தல் நடைபெறும் போது அதில் போட்டியிட்டு சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அமைச்சர் உதய குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் சின்ன அம்மா சசிகலா. அவர் தியாகத்தின் வடிவமாக திகழ்ந்தார்.
1 கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக சசிகலா விளங்குகிறார். அவர் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் காட்டும் வழியில் விசுவாசத்துடன் அரசியல் பயணம் தொடருவோம். அவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி ஏற்று கட்சியை வழி நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி சின்ன அம்மா சசிகலா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்று முதல்-அமைச்சராகவும் ஆக வேண்டும் என்று அவர் கூறினார்.

Share This Post

Post Comment