அமெரிக்காவை உலுக்கிய ஹார்வே புயல் பலி எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு

ekuruvi-aiya8-X3

Harvey-Rescue-அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வே புயல் தாக்கியதில் அங்குள்ள ஹூஸ்டன் நகரம், ஆஸ்டின் நகரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடற்கரை நகரமான ஹூஸ்டனில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 3 நாளில் மட்டும் 125. செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

நகரின் 3-ல் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. ஹூஸ்டன் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

புயல் தாக்கி ஒரு வாரம் ஆகியும் பல்வேறு இடங்களில் மீட்பு பணியை தொடங்க முடியாத அளவுக்கு இன்னும் வெள்ள நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக டெக்சாஸ் கடலோர பகுதிகளில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் உண்ண உணவின்றிரும் குடிக்க தண்ணீர் இன்றியும் தவித்து வருகின்றனர்.

32 ஆயிரம் பேரை மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே 37 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே, புயல் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

Share This Post

Post Comment