புதுவையில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: அரசு- தனியார் பள்ளிகளை 22-ந்தேதி முதல் மூட உத்தரவு

ekuruvi-aiya8-X3

veyilதமிழகம் மற்றும் புதுவையில் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொது மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வருகிற 22-ந் தேதி முதல் மூட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான ஆணையை கல்வித்துறையின் இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் பிறப்பித்துள்ளார்.

Share This Post

Post Comment