இறந்துபோன புலிகளின் எச்சங்களுக்கு புத்துயிர் கொடுக்கிறார் விக்னேஸ்வரன்!

Thermo-Care-Heating

ajith_p-01_0வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழர், சிங்களவர், முஸ்லிம் என மூவின மக்களும் ஒன்றிணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளார் மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரோ.

பண்டார கமவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடையே உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் இறந்துபோன புலிகளின் எச்சங்களுக்கு புத்துயிர் கொடுக்கவே வடக்கு மாகாண முதலமைச்சர் முயற்சிக்கின்றார்.

வடக்கிலுள்ள சராசரி குடிமகனின் தேவைகள் குறித்து விக்னேஸ்வரனுக்கு எந்தக் கவலையும் கிடையாது.

வடக்கிலுள்ள இனவாதிகளுடன் இணைந்து அவரும் நாட்டின் ஒற்றுமை மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி முயற்சியையும் குழப்ப முயற்சிக்கின்றார்.

விக்னேஸ்வரனின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றாது. அவரது கோரிக்கை நாட்டைப் பிளவுபடுத்தும்.

மூவின மக்களும் சமமான உரிமையுடன் வாழவே இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.

ideal-image

Share This Post

Post Comment