“புரட்சி மலர் தீபா பேரவை“ தொடக்கம்

ekuruvi-aiya8-X3

deepa-jayakumarகீழக்கரையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளை ஆதரித்து புரட்சி மலர் தீபா பேரவை தொடங்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அ,தி.மு.க. தொண்டர்கள் சென்னையில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு தினமும் குவிந்து வருகிறார்கள். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீபா பெயரில் அமைப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதை வெளிப்படுத்தும் வகையில் ஆங்காங்கே தீபா படத்துடன் கூடிய பேனர்களை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக “புரட்சிமலர் தீபா பேரவை” என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தீபா பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஜகுபர் உசேன் (51) கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் களம் இறங்க தயாராக உள்ளனர். இதற்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு எங்களிடம் வலியுறுத்தினார்கள்.

மேலும் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவமும் வழங்கினார்கள். போஸ்டர் மற்றும் பேனர்களில் சென்னை தலைமை செயலகம் படத்தை பயன்படுத்துமாறும் அறிவுரை கூறினார்கள். பொங்கல் திருநாள் அன்று கட்சியின் பெயர், மற்றும் சின்னம் குறித்து அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment