ஆவா குழுவுடன் புலிகளுக்கோ, அரசாங்கத்துக்கோ, இராணுவத்துக்கோ தொடர்பில்லையாம்!

ekuruvi-aiya8-X3

ruwan-wijewardeneவடக்கில் இயங்கிவரும் ஆவாக்குழுவானது விடுதலைப்புலிகளினதோ, அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ அல்லது அரசியல் பின்னணியிலோ இயங்கவில்லையென சிறீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பியகமவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த 30 ஆண்டுகளாக நீடித்த போரானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சட்டத்தை தமது கைகளில் எடுத்துக்கொள்வதற்கு எந்தவொரு நபருக்கோ, அல்லது குழுவுக்கோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

ஆவா என்று அழைக்கப்படும் சிறிய குழுவினர் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆவா குழுவையும், சிறீலங்கா இராணுவத்தினரையும் தொடர்புபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவில் இயங்கும் சில நபர்களை பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின்மூலம் தண்டிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

Share This Post

Post Comment