யாழ். பல்கலைக்கழகத்தில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரிப்பு!

Facebook Cover V02

university of jaffnaநேற்று முன்தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் விஞ்ஞானபீட மாணவர்களின் வரவேற்பு நிகழ்விலேயே குறித்த மோதல் ஆரம்பமானது. இந்த மோதலையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை விஞ்ஞான பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்றையதினம் பல்கலைக்கழக பதிவாளரால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகம் உட்பட அனைத்துப் பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று வடக்கு மாகாண ஆளுநர் பல்கலைக்கழகத்துக்கு பயணம் மேற்கொண்டு சேதமடைந்த கட்டத்தைப் பார்வையிட்டுள்ளார்.

தற்போது, பல்கலைக்கழகத்திற்கு இனந்தெரியாத பலர் வந்துசெல்வதாகவும், அத்துடன் புலனாய்வுப் பிரிவினரின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment