க.பொ.த சாதாரண தரம், உயர் தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் வெளியீடு!

ekuruvi-aiya8-X3

exam345இவ்வாண்டுக்கான க.பொ.த உயர்தரம், சாதாரண தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி க.பொ.த உயர் தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 8ஆம் நாள் தொடக்கம் செப்ரெம்பர் மாதம் 2ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. இதன் செயன்முறைப் பரீட்சைகள் ஒக்டோபர் 20 முதல் நவம்பர் 5 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் நாள் நடைபெறவுள்ளது.

அத்துடன், உயர் தர சாதாரண தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இடம்பெறும் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 12ஆம் நாள் தொடக்கம் 21ஆம் நாள் வரையிலும், செயன்முறைப் பரீட்சைகள் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் நாள்முதல் மார்ச் மாதம் 9ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share This Post

Post Comment