குழந்தைகளுக்கு சத்தான வெஜிடபிள் புட்டு

vegetable-puttu-4
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கு
தேங்காய் துருவல் – அரை கப்
கேரட் – 2
பீன்ஸ் – 15
பட்டாணி – சிறிதளவு
Vegetable-Puttu14
செய்முறை :
கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு, அதனுடம் பொடியாக நறுக்கிய காய்கறிகள், தேங்காய் துருவல் சேர்த்து அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும். பின்னர் புட்டு குழாயில், இந்த மாவை நிரப்பி புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சத்தான வெஜிடபிள் புட்டு ரெடி.

Related News

 • பிஸிபேளாபாத் செய்து சுவைப்போமா?
 • ஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வோமா?
 • சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?
 • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
 • பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா செய்வோமா?
 • சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
 • சுவையான மீல்மேக்கர் உப்புமா செய்வோமா?
 • சுவையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *