500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு – பொதுமக்கள் திண்டாட்டம்

ekuruvi-aiya8-X3

atm911நாட்டில்   புழக்கத்தில் உள்ள ரூ. 500, ரூ. 1000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு கள் செவ்வாய்க் கிழமை நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.

கருப்புப் பணத்துக்குக் கடிவாளம் போடவும், போலி ரூபாயான கள்ள நோட்டுகளை  கட்டுப்படுத்த வும்,   தீவிரவாதத்துக்கு இந்திய பணம் பயன்படுத்தப் படுவதை தடுக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆனால் இது பொதுமக்களுக்கு கடும் திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வங்கிகளும் செயல் படாமல், ஏ.டி.எம்.களும் மூடப்பட்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க் கையில் பாதிப்பு ஏற்பட்டது. சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளில் உள்ளவர்களும் ஏதாவது ஒரு வகையில் அவதிக்குள்ளா னார்கள். ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை மட்டுமே வைத்திருந்தவர்கள் கடும்  திண்டாட்டத்தை சந்திக்க நேரிட்டது.

இன்று காலை முதல் எல்லோரும் தங்களிடம் உள்ள ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை மற்றவர்களிடம் தள்ளி விடு வதில்தான் குறியாக  இருந் தனர். அதே சமயத்தில் ரூ. 500, ரூ. 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர். இந்த நிலைதான் இன்று பல இடங் களில் மக்களை திணற வைத் தது.

ஏழைகள், கூலித் தொழி லாளர்கள் உடனடியாக பாதிப்பை    சந்தித்தனர். அவர்களுக்கு 500 ரூபாய்க்கு குறைவாக கூலி கொடுக்க வேண்டிய  இடங்களில் கடும் திணறலாக இருந்தது. இதனால் அன்றாடம் சம் பாதிக்கும் தொழிலாளர்கள் பணம் இல்லாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இவர்களுக்கு அடுத்தப் படியாக வியாபாரிகள் கடும் திண்டாட்டத்துக்குள்ளா னார்கள். கடைகளில் ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மறுத்தனர். சில பெரிய கடைகளில் மட்டும் ரூ. 500 நோட்டுகளை வாங் கினார்கள்.

ஆனால் அவர்கள் மீதி சில்லரை பணத்தை திருப்பி கொடுப்பதில் சிரமப்பட் டனர். குறைந்த அளவே ரூ.100 ரூ.50 நோட்டு கள் இருந்ததால் சிறு வியா பாரிகள் இன்று வழக்க மான வியாபாரத்தை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

சிறு வியாபாரிகள் மட்டு மின்றி, பெரிய கடைகளிலும் பண பரிமாற்றத்தில் பாதிப்பு காணப்பட்டது. ஜவுளி கடை கள், ஓட்டல்கள், மால்கள், சந்தைகள், சுவிட் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடை களிலும் ரூ. 500 நோட்டு களால் பிரச்சினை ஏற்பட் டது.

மீன் கடைகள், பால் கடை கள், மளிகை கடைகளில் அதிக பாதிப்பு காணப் பட்டது. வெளியூர்களுக்கு சுற்றுலா சென்றிருப்பவர்கள் கடும் அவதியை சந்தித்தனர். சில சுற்றுலா பயணிகள் எதுவும் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பெட்ரோல் பங்க்குகளில் ரூ. 500 நோட்டை மாற்ற கூட்டம் அலை மோதியது. ரூ. 500 நோட்டு வைத்திருப் பவர்களுக்கு பல இடங்களில் பெட்ரோல் போட அனுமதி மறுத்தனர். இதனால் சிலர் ரூ. 500-க்கும் பெட்ரோல் நிரப்பிச் சென்றனர்.டாஸ்மாக், ரேசன் கடை, காய்கறி கடைகளிலும் ரூ.500 நோட்டுகளால் வியா பாரிகளும், மக்களும் கடும் அவஸ்தைக்குள்ளானார்கள். பங்கு சந்தைகளிலும் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது.

திருமணத்துக்கு தங்கம், வெள்ளி நகைகள் வாங்க முடியாமல் நிறைய பேர் தவிக்க நேரிட்டது. கையில் லட்சக்கணக்கில்  பணம் இருந்தும், ஒரு கிராம் தங்கம் வாங்க  இயலவில்லையே என்று சிலர் வேதனைப் பட்டனர்.

பெரும்பாலும் நடுத்தர, பெரிய கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தயங்கா மல் வாங்கிக் கொண்டனர். சிறு வியாபாரிகள்தான் ரூ.500 நோட்டுகளை வாங்க மறுத்தனர்.
ரெயில் மற்றும் பஸ்களில் செல்வதற்கு முன்பதிவு செய்ய   சென்றவர்களும் அவதிக்குள்ளானார்கள். அதுபோல பஸ்களிலும் ரூ.500 நோட்டுகளை வாங்க மறுத்தனர்.

ஆவின் பால் வாங்க  காலை யில் சென்றவர்களிடம் 500 ரூபாய் செல்லாது. அதனால் 50, 100 ரூபாய் இருந்தால் மட்டும் கொடுங்கள் என்று வியாபாரிகள் கூறினர். இதனால் பால் வாங்க முடி யாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தபோதிலும் அதனை யாரும் ஏற்கவில்லை. மருந்து கடைகளில் அவசர மாக மருந்து வாங்க சென்ற வர்களிடம் கூட 500 ரூபாய் நோட்டினை வாங்க  மறுத்து விட்டனர். இதனால் கடை ஊழியருக் கும்,  பொதுமக்களுக்கும் இடையே வாய் தகராறு பல இடங்களில் ஏற்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும்  சினிமா நடிகர் நடிகைகள்  ஆதரவு தெரித்து உள்ளனர்.

Share This Post

Post Comment