2020 ஆம் ஆண்டில் தனி அரசாங்கம் அமைப்பதே எமது நோக்கம்

Facebook Cover V02

lakhsman_112020 ஆம் ஆண்டாகும் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதே கட்சியின் நோக்கம் என கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இல்லை, ஐக்கிய தேசியக் கட்சிக்கே எனவும் கடந்த தினத்தில் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment