பிரித்தானியாவில் நிதர்சன், குரு, கோபி, கென்னி, இந்துசன் ஆகியோர் நீரில் மூழ்கி பலி!

Facebook Cover V02

ukஇங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்றையதினம் 5 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

இறந்த ஐந்துபேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மூவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் கம்பர் சான்ட் கடற்கரைக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை கடலில் மூழ்கி 7பேர் இறந்துள்ளனர். இன்னும் இருவரின் நிலை தொடர்பில் தெரியவில்லையெனவும் அவர்கள் இருவரும் ஹெலிகொப்டரின் உதவியுடன் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதைவிட சென்ற கிழமையும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்துசன் சிறி
இந்துசன் சிறி

குருசாந் அண்ணாவுடன் வலப்பக்கத்தில் நிதர்சன் ரவி (செல்பி)
குருசாந் அண்ணாவுடன் வலப்பக்கத்தில் நிதர்சன் ரவி (செல்பி)

நிதர்சன்
நிதர்சன்

Share This Post

Post Comment