மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு முன்னாள் போராளிகளுக்கு வலியுறுத்தல்

Thermo-Care-Heating

munnalஇராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுள் இதுவரை சுமார் 103 பேர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதேவேளை, பெரும்பாலான முன்னாள் போராளிகளுக்கு இடுப்பின் கீழ்ப்பகுதி செயலிழந்து காணப்படுகின்றது.

இந்நிலையில், இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பலமடைந்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு முன்னாள் பேராளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதியில் வசிக்கும் முன்னாள் பேராளிகளும் 0777735081, 0773169997 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இலவச மருத்துவ பரிசோதனைக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment