நிலைபேறான அபிவிருத்தியை 2030ம் ஆண்டளவில் வெற்றி கொள்வதே இலக்கு

Ranil-3சமகால அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை 2030ஆம் ஆண்டளவில் வெற்றி கொள்வதே இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மூன்றாவது வருடாந்த மாநாடு இன்று காலை ஆரம்பமானது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இந்த இலக்கை பூர்த்திச் செய்வதற்கு அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் விசேடத் திட்டமொன்றை தேசிய கொள்கையாக இனங்காணப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பிரதமர் தலைமையில் இந்த மாநாடு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கினார்.

சிறிய மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் விசேட கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயல் திட்டத்தை கண்காணிப்பதற்கு பாராளுமன்றத்தில் விசேட கண்காணிப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த இலக்குகளை அடைய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.






Related News

  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *