வாய்ப்பு கொடுத்தால் பெண்கள் எதையும் சாதிப்பார்கள் – மோடி

ekuruvi-aiya8-X3

modi17மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளிடம் நமே ஆப் மூலம், வீடியோ கான்பிரன்ஸ் வசதியில் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் மகளிர் குழுவினரிடையே இன்று மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், அடிமட்டத்தில் இருந்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் எத்தகைய நேர்மறை மாற்றங்களை கொண்டு வந்துள்ளன என்பதை காட்டுவதே இந்த கலந்துரையாடலின் நோக்கம். மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை கேட்பது அற்புதமான அனுபவமாக உள்ளது. எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் இன்று பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். விவசாயம், பால் வளத்துறையை பொறுத்தவரை பெண்களின் பங்களிப்பு இல்லாததை நினைத்து பார்க்க முடியவில்லை.

நாம் பெண் அதிகாரம் பற்றி பேசுகிறோம். ஆனால் அவர்களின் திறமையை வெளி கொண்டு வருவதற்கு சரியான வாய்ப்புக்கள் ஏற்படுத்தி தருவதே மிக முக்கியம். வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் எதையும் சாதிப்பார்கள் என்றார்.

Share This Post

Post Comment