பிரிக்க முடியாத இலங்கைக்குள் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு! கூட்டமைப்பின் யோசனை முன்வைப்பு

ekuruvi-aiya8-X3

tna-300x200பிரிபடாத மற்றும் பிரிக்கப்பட முடியாத (Undivisible) இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற யோசனையை புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிரதான வழிநடத்தல் குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் அரசிலயமைப்பு நிர்ணய சபையின் பிரதான வழிநடத்தல் குழுவானது எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடும் என்று அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

கடந்த 07 ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிரதான வழிநடத்தல் குழுவானது ஆராய்ந்திருந்தது. அதன்படி அண்மையில் இரண்டாவது தடவையாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய இந்த பிரதான வழிநடத்தும் குழுவானது தீர்வுத் திட்டம் தொடர்பில் ஆராய்ந்திருக்கின்றது.

இதன்போதே பிரிபடாத மற்றும் பிரிக்கப்பட முடியாத (Undivisible) இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான வழிநடத்தல் குழுவுக்கு முன்வைத்திருக்கிறது.

இது தொடர்பில் எதிர்வரும் கலந்துரையாடல்களின் போது ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வரும்போது சமஷ்டி முறைமையை வடக்கு, கிழக்கு மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் பெரும்பான்மை மக்கள் ஒற்றையாட்சி முறைமையை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறான நெருக்கடியான நிலைமையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இவ்வாறான யோசனையை முன்வைத்திருக்கிறது.

எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள பிரதான வழிநடத்தல் குழுவின் அடுத்த கட்ட கூட்டங்களின்போது கூட்டமைப்பின் இந்த யோசனை தொடர்பில் ஆராயப்படும் என நம்பப்படுகிறது.

இந்த பிரதான வழிநடத்தல் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment