பிரிட்டனுக்கு ஜெர்மனி எச்சரிக்கை

ekuruvi-aiya8-X3

Britainஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நடைமுறைகளை தாமதிக்காமல் தொடங்க வேண்டும் என பிரிட்டனுக்கு ஜெர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கியதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், வேலைவாய்ப்பு பறிபோவதாக பிரிட்டன் மக்கள் பலர் வெளிப்படையாக கூறத் தொடங்கினார்கள். இதுபோன்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால், ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து பொது வாக்கெடுப்பில் முடிந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா வேண்டாமா என என்பது குறித்து கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறுவதற்கு ஆதரவாக 52 சதவீத மக்கள் வாக்களித்தனர். இதையடுத்து பிரிட்டன் பிரிவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

ஆனால், ஐரோப்பிய யூனியனின் விதியை பிரிட்டன் அரசாங்கம் மீற முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த வழக்கை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம், அரசாங்கம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற முடியாது என்றும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பளித்தது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஜெர்மன் சென்ற பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன், பெர்லின் நகரில் ஜெர்மன் வெளியுறவுத்துறை மந்திரி ஸ்டெயின்மியரை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெயின்மியர், ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் நடைமுறைகளைத் தொடங்குவதற்கு பாராளுமன்ற ஒப்புதல் தேவை என பிரிட்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தாமதம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார்.

நீதிமன்றம் முடிவு செய்தபோதிலும், பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்த வாரம் ஆலோசித்து பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் நிர்ணயித்துள்ள கால அட்டவணையில், நீதிமன்ற தீர்ப்பு குறுக்கிடும் என நினைக்கவில்லை என்று ஜான்சன் தெரிவித்தார். மேலும், பொது வாக்கெடுப்பு என்பது பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சமஅளவிலான வெற்றி என்றும் அவர் கூறினார்.

Share This Post

Post Comment