கொழும்பில் காணாமல் போன பிறேம்குமார் குணரட்னம் கண்டு பிடிக்கப்பட்டு அவுஸ்த்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்!
Apr 10 2012 08:58:39

அவஸ்த்திரேலியாவில் இருந்து கொழும்பிற்குச் சென்றிருந்த அரசியல் பிரமுகரான பிறேம்குமார் குணரட்னம் கடந்த 6ம் திகதி வெள்ளியன்று காணாமற் போனார். அவுஸ்த் திரேலிய அரசு மேற் கொண்ட கடும் நடவடிக்கையின் காரணமாக அவர் கண்டு பிடிக்கப் பட்டு இன்று செவ்வாய்க்கிpழமை அவுஸ்த்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடையில் உள்ள அவரது வீட்டிலிருந்த போதே அவர் காணாமற் போனதாகவும் தமது கணவர் ஸ்ரீலங்கா அரச படையினரால் கடத்தப்பட்டு விட்டதாகவும்; அவுஸ்த்திரே லியாவிலிருந்த டாக்டரான அவரது மனைவி சம்பா சோமரத்ன அவுஸ்த்திரேலிய வெளி விவகார அமைச்சு அலு வலகத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

பிறேம்குமார் அவுஸ்த்திரேலிய பிரஜை என்பதனால் அவரை தேடிக் கண்டு பிடிக்க நடவடி க்கை எடுப்பதாக அவுஸ்த்திரேலிய வெளிநாட்டு அமைச்சு அலுவலகம் உறுதி அளித்திரு ந்தது. அத்துடன் அவுஸ்த்திரேலியாவில் கன்பெரா என்ற இடத்திலுள்ள ஸ்ரீலங்கா தூதுவர் திசார சமரசிங்கவுக்கும், கொழும்பிலுள்ள தமது தூதுவர் மிஸ் றொவின் முடி என்பவருக் கும் அறிவித்து இதுபற்றி உடனடி நடவக்கை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தது.

ஸ்ரீலங்காவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ கட்சியின் தலைவியான பெண்ம ணியுடன் அவர் காணாமல் போனதாகவும், அக்கட்சியின் ஆரம்பக் கூட்டம் கடந்த திங்கட் கிழமை நடைபெற விருந்ததாகவும் அக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக குணரட்னம் நியமிக்கப்படவிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்தர்ப்பத்திலேயே அவர் காணால் போயிருந்தார். கொழும்பிலு ள்ள அவுஸ்த்திரேலிய தூதுவர் பாதுகாப்புச் செய லாளரான கோதபயா ராஜபக்ஸவுடன் இதுபற்றி தொடர்பு பெகாண்ட போது அந்தப் பெய ரில் எவரும் ஸ்ரீலங்காவுக்கு வந்ததாக தகவல் இல்லை. அப்படி அவர் வந்திருந்தாலும் வேறு யாருடைய பெயரில் உள்ள கடவுச் சீட்டுடன் வந்திருக்க லாம் எனவும் கூறினாராம். அத்துடன் அவர் தானாகவே தலைமறைவாக இருக்கலாம் எனவும் கூறினாராம்.

பின்னர் பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோகண என்பவர் யாரோ ஒரு கோஷ்டியினர் திங் கட்கி ழமை இரவு பிறேம்குமார் என்பவரை தெமடட்க்கொடை வீதியில் கைவிட்டுச் சென் றதாகவும் அவர் பொலிஸ் நிலையத்தில் வந்து சரண் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மறுநாளான இன்று அவர் அவுஸ்த்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கொழு ம்பிலுள்ள அவுஸ்த்திரேலிய அதிகாரிகள் அவருடன் விமான நிலையத்துக்குச் சென்று அவரை வழியனுப்பி வைத்தார்கள்.

 

 
Sep 11 2012 08:13:30 [Tamil]
தமிழர்களின் தெய்வமாகிய நல்லூர் கந்தன் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி 25 நாட்கள் சீரும் சிறப்பமுமாக நடந்து முடிந்தது. விழாவின் முக்கிய நாளான 24 ஆம் நாள் தேர் திருவிழாவின் போது பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க நல்லூர்க்கந்தன் தேரில் எழுந்தருளி வலம் வந்தார்.

Read More >

Sep 10 2012 11:11:39 [Tamil]

Read More >

Sep 09 2012 09:54:52 [Tamil]
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னராக ஆட்சியமைப்பு குறித்த பேரம்பேசல்களில் ஐ.ம.சு.கூ, த.தே.கூ மற்றும் மு.கா உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற நிலையில்; இந்த தேர்தலில் 'பிள்ளையானின்' வகிபாகம் குறித்து சில பார்வைகள்.

Read More >

Sep 08 2012 13:39:39 [Tamil]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 ஆசனங்களும்

Read More >

Sep 04 2012 10:36:38 [Tamil]
இலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டு உள்ளார் தர்சினி சிவலிங்கம். நாட்டின்

Read More >

Jul 26 2012 12:18:17 [Tamil]
அஜித் நடித்து வெளியாகியிருக்கும் பில்லா 2 திரைபடம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட நாளில், அஜித்தின் அட்டை உருவத்திற்கு பாலூற்றி;க் களித்திருக்கின்றனர் யாழ்ப்பாண ரசிகர்கள்.

Read More >

Jul 07 2012 08:22:03 [Tamil]
தமிழகத்தின் ௭திர்ப்பினால் பயிற்சிகளை இடைநடுவில் நிறுத்தி இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளை திருப்பியனுப்ப இந்திய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையானது கவலையளிக்கின்றுது. ௭ன்று

Read More >

Jul 07 2012 08:13:35 [Tamil]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தமிழ் மக்களுக்கு அதிக அளவில் நன்மை செய்ய முடியும் என்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம்

Read More >

Jul 06 2012 07:56:16 [Tamil]
இரணைமடு குளத்தில் மீன்பிடி பிடிப்பதற்கு விமானப்படையினர் தடை விதித்துள்ளதால் இக்குளத்தில் மீன்பிடி தொழிலையே நம்பியிருக்கும் கிளிநொச்சி அழகாபுரி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும்

Read More >

Jul 06 2012 07:51:19 [Tamil]
யாழ். உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேம்நாத் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கவோ அது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கவோ முடியாத அளவிற்கு யாழ். நீதவான் கணேசராசாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்

Read More >