முன்னாள் பிரதமர் ஜயரட்ன கட்சியின் சிரேஸ்ட தலைவர்களிடம் உருக்கமான வேண்டுகோள்

sdsd

maithri mahintha chanrikaமுன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாது இருப்பதனை உறுதி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சிக்குள் தற்போது இடம்பெற்று வரும் சமப்வங்கள் பெரும் வேதனையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியை பாதுகாக்குமாறு தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று தலைவர்களையும் இணைக்க தாம் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மூன்று தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எந்த நேரத்திலும் சுதந்திரக் கட்சி இலகுவில் தேர்தலில் வெற்றியீட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை ஐக்கியப்படுத்துமாறு பலர் தம்மிடம் கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

‘நான் நீண்ட காலம் உயிர் வாழப்போவதில்லை எனினும் கட்சியின் மீதான என் நேசம் என்னும் அழியாது’ என முன்னாள் பிரதமர் ஜயரட்ன உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment