போர்க்குற்ற விசாரணை தொடர்பாக ஆராய விசேட குழு!

Thermo-Care-Heating

saddamஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உத்தேச நீதி விசாரணைப் பொறிமுறை குறித்து ஆராய, சட்டத்தரணிகள் மட்டத்தில் விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.

அடுத்த வாரமளவில் ஐவரைக்கொண்டு இக்குழு அமைக்கப்படவுள்ளதாக சிறீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

உருவாக்கப்படவுள்ள உத்தேச நீதி விசாரணைப் பொறிமுறையானது சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டதாகவே அமையவேண்டுமென்பதே, சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடென அச்சங்கத்தின் உப தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இக்குழுவால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள், மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான நல்லிணக்க பொறிமுறை செயலணிக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ideal-image

Share This Post

Post Comment