முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச மருத்துவப் பரிசோதனை நடாத்தப்படவேண்டும்!

sdsd

ravikaranமுன்னாள் போராளிகளுக்கு சர்வதேச ரீதியிலான மருத்துவப் பரிசோதனை நடாத்தவேண்டுமென வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட அலுவலக கட்டடத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், அண்மையில் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் வசிக்கும் போராளியொருவர் தமக்கு வலுக்கட்டாயமாக ஊசி ஏற்றியதாகவும், தன்னால் முன்புபோல் தற்போது இயங்கமுடியாதுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

குறித்த போராளியின் கருத்தை கவனத்திலெடுத்து சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், தற்போதுள்ள அரசாங்கத்தின்மீது மக்கள் நம்பிக்கை கொள்ளத் தயாரில்லை எனத் தெரிவித்த ரவிகரன், ஒரு நம்பிக்கையான சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ள அதேவேளையில், எமது விடுதலைக்காக அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது தோல்வியடைந்த நிலையிலே, விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப்போராடியவர்கள்தான் போராளிகள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment