வவுனியாவில் முன்னாள் போராளி கைது!

ekuruvi-aiya8-X3

arrest_07வவுனியாவில் முன்னாள் போராளி ஒருவர் வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.

கடந்த 27ஆம் திகதி இரவு கொக்குவெளியில் அமைக்கப்பட்டுள்ள சிங்களப் படைக் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளியும், அவரது கூட்டாளியும் ஆயுதங்களைக் காட்டி தம்மை உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகத் தெரிவித்து 30 சிங்கள குடும்பங்கள் ஏ 9 வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியதோடு, மிரட்டியவர்களைக் கைதுசெய்வதாகவும் உறுதிமொழி வழங்கினர்.

இதற்கமையவே, சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளியும், அவரது சகாவும் இன்று வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொக்குவெளி என்ற தமிழ் கிராமத்தில் தனியார் ஒருவருககுச் சொந்தமான காணியை அபகரித்து, அங்கு படையினருக்கான குடியேற்றத் திட்டம் ஒன்று நிறுவி கடந்த ஏப்ரல் மாதம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தனவால் திறந்துவைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment