டெல்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து நக்மா ஆதரவு

ekuruvi-aiya8-X3

Nagma-meet-TN-Farmers-in-delhi-and-extends-cong-supportவிவசாயிகள் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 28-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை நடிகையும் மகிளா காங்கிரஸ் நிர்வாகியுமான நக்மா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, “விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம். விவசாயிகளை ஆதரிக்க வேண்டியது நமது கடமை. விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும்.

விவசாயிகளை ஆதரிக்க வேண்டியது நமது கடமை. காங்கிரஸ் ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யபட்டது. அதேபோல், தற்போது ஏன் பா.ஜ.க அரசு செய்யவில்லை?” என்றார்.

முன்னதாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment