மீண்டும் போராட்டம் நடாத்த தமிழ் அரசியல் கைதிகள் முடிவு!

Thermo-Care-Heating

jejilமனிதாபிமான அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் தமது போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசினால் உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தைப் புறக்கணிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனை வேதனையோடு தெரிவித்துக்கொள்வதாகவும் தமது உறவுகளினூடாக அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தால் தமக்களிக்கப்பட்ட வாக்குறுதிகள் 8 மாதங்களைக் கடந்துவிட்டபோதிலும், இதுவரை எமது விடுதலைக்காக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாட்டிலுள்ள 14 சிறைச்சாலைகளிலும் இருந்த அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

எமக்கு ஆதரவாக பல பொது அமைப்புக்கள், ஊடகங்கள் எல்லாம் நாடு தழுவிய ரீதியில் பல கண்டனப்பேரணிகளை நடத்தியது மட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கு மகாணங்களில் ழுமுக்கடையடைப்பும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்காரணமாகவே சிறப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது. இருப்பினும், அது எண்ணைச்சட்டியில் தவறிவிழுந்த கதையாகப் போய்விட்டது.

சிறப்பு நீதிமன்றத்தின் செயற்பாடு தொடர்பாக நாம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியப்படுத்திவிட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ideal-image

Share This Post

Post Comment