சாதகமான முடிவு எட்டப்படாவிடின் போராட்டம் வெடிக்கும்!

Facebook Cover V02

meenavarkalஇன்று கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையிலான குழுவினருக்கும் இந்திய அதிகாரிகளுக்குமிடையில் வடக்கு மாகாண மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இப்பேச்சுவார்த்தையில் வடக்கு மாகாண மீனவர்களுக்கு சார்பாக முடிவுகள் எட்டப்படாவிடின் போராட்டம் வெடிக்கும் என வடக்கு மாகாண மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது டெல்லியின் இடம்பெற்ற மீனவர்களுடனான பேச்சுவார்த்தையின்போது கலந்துகொண்ட வடக்கு மாகாண மீனவர் குழுக்களின் தலைவர் எஸ்.சுப்ரமணியம் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்களின் மீனவ உபகரணங்கள், கடல் வளங்கள் என்பன அழிக்கப்படுவது மற்றும் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது எமது குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இந்திய மீனவர்கள், தாம் சொந்தமாக வேறு தொழிலைத் தேடும் வரைக்கும், ஆகக் குறைந்தது 3 வருட காலங்கள் அவகாசம் கோரினர்.

ஏற்கனவே இவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தும் அவையனைத்தையும் மீறியே தொழிலில் ஈடுபட்டனர். ஆகவே, இதுவரை காலமும் இந்திய மீனவர்களுக்கு வாய்ப்பளித்து நாம் எமது வாழ்வாதாரத்தை இழந்து வந்துள்ளோம். இனியும் அவர்களுக்குக் கால அவகாசத்தை வழங்கி எமது வாழ்வாதாரத்தை இழக்க நாம் தயாரில்லை. ஆகவே 3 வருடங்கள் அல்ல 3 நிமிடங்கள் கூட எங்களால் கால அவகாசம் தரமுடியாது எனத் தெரிவித்துள்ளோம்.

இன்நிலையிலேயே இன்று, கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையிலான குழுவினர் டெல்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர். இதன்போது வடக்கு மீனவர்களின் கருத்துக்களை ஏற்று அவர்களுக்குச் சாதகமாகப் பேசுவார்கள் என நம்பியிருக்கின்றோம்.

அத்துடன், எமக்குச் சார்பாகப் பேசி தீர்வைப் பெற்றுத்தரவேண்டுமென அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுக்கின்றோம். இந்நிலையில், எதிர்மறையான முடிவுகள் வருமெனில் நாம் பல போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment