போராட்டம் கைவிடப்பட்டும் கருத்தொருமிப்பு வரவில்லை

ctbவவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடுவது தொடர்பில் இ.போ.ச. ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நேற்று மதியம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் தனியார் மற்றும் இ.போ.ச.வினருக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய பேரூந்து நிலையத்திலுள்ள இரு கட்டிடத்தொகுதிகளில் தமக்கு ஒரு கட்டிடத்தொகுதியை வழங்குமாறும் அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையினை முன்னெடுப்பதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் தேசிய போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் தனியார் மற்றும் இ.போ.ச. ஊழியர்களுடன் கலந்துரையாடி பேரூந்து நிலையத்தின் முதலாவது கட்டிடத் தொகுதியை இ.போ.ச.வினருக்கு வழங்கியிருந்தனர்.

இதன் அடிப்படையில் வட மாகாணம் முழுவதுமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று தமது பணிபகிஷ்கரிப்பை கைவிட்டு பணிக்கு திரும்பியிருந்தனர்.

இந் நிலையில் நேற்று மாலை 3 மணியில் இருந்து தமது சேவையினையும் அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

எனினும் வெளி மாகாணங்களுக்கடையிலான பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்தினுள் உள் நுழையமுடியாது என உடன்பாட்டுக்கு வந்திருந்தபோதிலும் இலங்கை போக்குவரத்து சபையினர் வெளிமாவட்டத்தில் இருந்து மாகாணங்களுக்கடையில் சேவையில் ஈடுபடும் பேரூந்துகளை புதிய பேரூந்து நிலையத்தினுள் கொண்டு வந்து நிறுத்தி பயணிகளை ஏற்றியமை மற்றும் ஒரே வழித்தடத்தில் பயணிக்கும் பேரூந்துகளுக்கு போட்டியாக தமது பேரூந்துகளை செலுத்தியமையினால் தனியார் மற்றும் இ.போ.ச.வினருக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Related News

  • எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை
  • ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்
  • ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி
  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *