தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு போராட தயங்க மாட்டேன்: ராமதாஸ்

Facebook Cover V02

ramathas-1-450x225தமிழக மக்களின் எந்த பிரச்சனைக்கும் போராட தயங்க மாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் பாமகவின் 2016 சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், விவசாயிகளை கடவுள் என கொண்டாடும் கட்சி பாமகதான் என்றும், இதனால் தான் கடந்த 6 வருடங்களாக விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பிற அரசியல் கட்சி தலைவர்கள் சென்னையில் இருந்து அரசியல் செய்யும் போது விவசாயியாக இருப்பதால் தான், கிராமத்தில் இருந்து அரசியல் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் தான் ஒரு ஒரு போராட்டக்காரர் எனவும், தமிழக மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் போராட தயங்க மாட்டேன் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.

Share This Post

Post Comment