பூர்வீககுடிமக்களின் பண்பாட்டுஅபகரிப்பு – எஸ்.ராஜ்மோகன்

சங்ககாலத்தில் ஓர் அரசன் போர் புரிந்துநாட்டைவென்றபின்னர்,அங்குஒருசிற்றரசனைநியமித்துஅரசாட்சிசெய்வதுவழக்கம். சிலசமயங்களில் சிற்றரசரைநியமிக்காமல் அந்தநாடுமுழுமையாகஅழிந்துபோகவிடப்படும். இதற்காகஅரசர்கள் செய்தயுக்திகளில் ஒன்றுதான்கொள்ளுவிதைத்தல்ஆகும்.அழிக்கப்படவேண்டியநாட்டில் உள்ளமக்களையும்,வளங்களையும் தனதுஅதிகாரத்தில் உள்ளபகுதிகளுக்கு இடம் மாற்றிவிட்டு,அந்தப் பகுதிகளில் உள்ளவயல்களில் கொள்ளுஎனப்படும் தானியவகையைவிதைத்துவிடுவார்கள். இந்தக்கொள்ளுஎன்றதானியத்தின் சிறப்பம்சம்யாதெனில் அதைஎங்குவிதைத்தாலும் நல்லவிளைச்சல் கிடைக்கும்;மழையோதண்ணீரோஅதிகம் தேவையில்லை;பராமரிப்பும் தேவையில்லை;தம்மைத் தாமே இனப்பெருக்கிகுறுகியகாலத்தில் பெருகிவிடும். இதைவிடகொள்ளுக்குரியஇன்னுமொருமுக்கியமானசிறப்பம்சம்,மண்ணில் உள்ளசத்துக்கள்அனைத்தையும் தாரளமாகஉறிஞ்சிக் கொள்ளும்ஆற்றல்கொண்டது. இதனால் கொள்ளுவிதைத்தபகுதிகளில் உள்ளமண்வளங்கள் யாவும் விரைவில் பாதிப்படைந்து,வேளாண்மைக்குஉதவாதபகுதியாகமாறிவிடும். இதன் மூலம் நீண்டகாலத்திற்கு இந்தநிலங்களில் விவசாயம் செய்யமுடியாதநிலைதோன்றும்.இதுதான் அரசர்கள் ஒருநாட்டைஉருப்படாமல் செய்வதற்குசெய்யும் இயற்கையானவழிமுறை.
இதேபாணியில்நாடுஒன்றிற்குப் பதிலாக,உலகில் வாழ்ந்தஒருமனித இனம் மறைமுகமாகஅழிவுக்குள்ளாகியிருப்பதுநாகரிகம் அடைந்தஉலகில்,வெட்கித் தலைகுனியவேண்டியஒருநிகழ்வாகஉள்ளது.first-nations-pow-wow-banner
இயற்கையோடுவாழ்ந்து,அதனைநேசித்து,ஒன்றித்து,வணங்கி,பண்பாட்டுவிழுமியங்களில் சங்கமித்து,பலமொழிகள்பேசி,சமூகப் பொருளாதாரமுறைமைகளைக் கொண்டுஉறுதியாக இருந்தஒருசமுதாயம் தான் கனேடியபூர்வீககுடிமக்களாவர் (யுடிழசபைiயெட pநழிடந). இந்தசமுதாயத்தின் கட்டுமானம் தான் ஐரோப்பியர்களின் திட்டமிட்டசதியினாலும்,ஆக்கிரமிப்பினாலும் சீர்;குலைக்கப்பட்டது. இந்தநிலைகனடாவில் வாழ்ந்தபூர்வீககுடிமக்களுக்குமட்டுமல்லஅமெரிக்கா,அவுஸ்திரேலியா,நியுசிலாந்துபோன்றஉலகின் பலபாகங்களிலும் வாழ்ந்தபூர்வீககுடிமக்களுக்கும் ஏற்பட்டது. உலகெங்கும் இவர்கள்யுடிழசபைiயெட Pநழிடநஇ யேவiஎந ஐனெயைளெஇ குசைளவ யேவழைn Pநழிடநஇ சுநன ஐனெயைளெபோன்றபலபெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
கனேடியபூர்வீககுடிமக்கள்என்பது,ஐரோப்பியர்கள் கனடாவிற்குகுடியேறமுன்பு,பல்லாயிரக்கணக்கானஆண்டுகளாக இங்குவாழ்ந்தமக்கள் ஆகும். கண்ணியமாகவும்,கட்டுப்பாடாகவும் வாழ்ந்தகனேடியபூர்வீககுடிமக்கள்,அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம்பின்வரும் மூன்றுஇனங்களாகப்பிரிக்கப்படுகின்றனர்.முதல் குடிமக்கள் (குசைளவ யேவழைளெ), இனியுட் (ஐரெவை),மெற்ரிஸ் (ஆநவளை). அத்துடன் இவர்கள் வாழ்ந்தபிரதேசங்களின் அடிப்படையில்மேலும் பலபிரிவுகளாகவும்பிரிக்கப்பட்டுள்ளனர். ஒருபெரியசமுதாயத்தின் நீண்டகாலஅழிவின் பின்னர், 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டபுள்ளிவிபரங்களின் படி,கனடாவில் 1இ400இ 685 பூர்வீககுடிமக்கள் வாழ்வதாகத்தெரியவருகின்றது. இதுகனடாவின் மொத்தசனத்தொகையில் 4.3சதவீதமாகும். இவர்களில் முதல் குடிமக்களின் தொகை851,560 ஆகவும்,மெற்ரிஸ் இன் தொகை451,795ஆகவும், இனியுட் இன் தொகை59,445 ஆகவும் இருக்கின்றது.
ஐரோப்பியர்கள்,குளிர் தேசத்தில் எவ்வாறுதப்பிப் பிழைத்தல் என்பதைபூர்வீககுடிமக்களிடம் இருந்துகற்றுக் கொண்டு,அவர்களுக்கேஆப்புவைத்துவிட்டார்கள். தொடர்ந்தஐரோப்பியர்களின் குடியேற்றமும் ஆதீக்கமும் பூர்வீககுடிமக்களின் வாழ்வியலைசிதைத்துகுட்டிச் சுவராக்கியது. ஐரோப்பியர்கள்வந்தபோதுதனிச்சொத்துரிமைஎன்றகருத்துருவைமட்டுமேகொண்டிருந்த இந்தமக்களிடமிருந்துபெரும் நிலப் பகுதிகளைமிகச் சொற்பதொகைகளுக்குஐரோப்பியர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள். இதனால் பூர்வீககுடிமக்களின்சொத்துகள் பெருமளவில் அபகரிக்கப்பட்டுஐரோப்பியர்களின் கைகளுக்குமாறியது. இதற்குமுக்கியஆயுதமாகப்பயன்படுத்தப்பட்டதுபோதைப் பொருட்கள்ஆகும். குறைந்தவிலையில் மதுபானங்களைஅதிகளவில் விநியோகித்து,பூர்வீக1Ei78Gx6qSR3nPD9RLJbEtMqகுடிமக்களைஅதில் அடிமையாக்கி,காரியத்தை இலகுவில் முடித்துக் கொண்டார்கள். இதுஒருமுற்றுமுழுதானஏமாற்றும் செயலாகவேகருதப்படுகின்றது.அத்துடன் ஐரோப்பியர்களின் வருகையினால் புதுப் புது நோய்களும்மக்களுக்குப் பரவ ஆரம்பித்தது. இந்தப் புதியநோய்களுக்குரியஎதிர்ப்புத்தன்மைமற்றும் மருத்துவவசதிகள் ஏதுவும் இன்றிபெரும்பான்மையானபூர்வீககுடிமக்கள்மரணமடைந்தார்கள். ஐரோப்பியர்களுக்குக்கிடைக்கும் மருத்துவவசதிகள், இவர்களுக்குக்கிடைக்காமையே இந்தஅழிவுக்குக்காரணமாகஅமைந்தது.
ஐரோப்பியர்களின் வருகையைஎதிர்த்துபூர்வீககுடிமக்கள் பலவழிகளிலும் போராடமுயன்றபோதும்,துப்பாக்கிகளுக்குமுன்னால்அம்பும் வில்லும் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. தொழில்நுட்பத்திலும்,ஒழுங்கமைப்பிலும்,நிர்வாகத்திலும் மேம்பட்டிருந்தஐரோப்பியர்கள், இவர்களை இலகுவாகவெற்றிகொண்டார்கள் என்பதேஉண்மை. ஐரோப்பியர்கள் ஆயிரத்துநானூறுகளின் பின்பகுதியில் அமெரிக்கக் கண்டத்தைஆக்கிரமித்துத் தம்மைநிலைநிறுத்திக்கொண்டவர்கள்ஆவர். அதன் பின்னரானகாலத்தில் பூர்வீககுடிமக்கள்வறுமைக் கோட்டிற்குக் கீழ் அத்தியாவசியவசதிகளற்றுஅரசியல்,சமூகம்,கல்வி,விளையாட்டுபோன்றஎந்தத்துறையிலும் போதியமுன்னேற்றமின்றிவாழ்ந்துவருகின்றனர். அகதிகளாகவந்தபுலம்பெயர் மக்களைஇந்நாட்டுப் பிரஜைகளாகஏற்றுக் கொண்டுவரும் அரசுகள்,பூர்வீககுடிமக்களைஅவர்களதுசொந்த இடத்திலேயேகவனிப்பாரற்றுவிட்டுவிட்டது. வீதிகளில் பிச்சைஎடுப்பவர்கள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களில் (hழஅநடநளள)பெருமளவிலானவர்கள் பூர்வீககுடிமக்களேஎன்பதுகவலைக்குரியவிடயம்.
தமதுசமயமற்றும் பண்பாட்டுக்கொள்கைகளைவலியுறுத்தியஐரோப்பியர்கள்,கணிசமானஅளவுபூர்வீககுடிமக்களைக்கட்டாயமாககிறித்தவசமயத்திற்குமதமாற்றம் செய்தார்கள். அதற்குவறுமையும் ஒருகாரணமாக இருந்தது. கிறித்தவபாடசாலைகள்அமைக்கப்பட்டு,குழந்தைகள் வலுக்கட்டாயமாகசேர்க்கப்பட்டனர். விடுதிகளில் தங்கவைக்கப்பட்டபூர்வீககுடிமக்களின் குழந்தைகள் மீதுபாடசாலைநிர்வாகம் இழைத்தகொடுமைகள்எண்ணிலடங்காது. பிள்ளைகளைமதம் மாற்றி,அவர்களைதமதுபழக்கவழக்கங்களுக்கு இசைபடவைத்துஅவர்களின் பாரம்பரியத்தைமுற்றாக இழக்கச் செய்தார்கள். பாடசாலைவிடுதிகளில் இடம்பெற்ற துஷ்ப்பிரயோகங்களும்,கொடுமைகளும் இறுதியில் நிர்வாகத்தினரால் ஒப்புக்கொள்ளப்பட்டுமுடிவுக்குவந்ததும் குறிப்பிடத்தக்கது.
தனிமைவாழ்க்கை,ஏழ்மைநிலை,உறைவிடமின்மை,பண்பாட்டுவிழுமியங்களுக்குமுக்கியத்துவம் தரப்படாமைபோன்றபலகாரணங்களால் பாதிப்படைந்தஇந்தச் சமுதாயத்தில் தற்கொலை,போதைப் பொருள்பாவனை,குற்றநடவடிக்கைபோன்றவைதலைவிரித்தாடுகின்றன. கனேடியஅரசுகள் யாவும் பூர்வீககுடிமக்களைதேசியநீரோட்டத்தில் இணைத்துக்கொள்வதற்கானமுயற்சியில் ஈடுபட்டுள்ளபோதும் அதுஎந்தஅளவுக்குவெற்றியடையும் என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
அண்மைக்காலங்களில் பூர்வீககுடிமக்கள் பற்றியபலவிடயங்கள் வெளிச்சத்திற்குவந்துகொண்டிருக்கின்றன. கடந்தமாதம் ளுயளமயவஉhநறயnஇல் இடம்பெற்றதுப்பாக்கிச் சூட்டுச்சம்பவம்,பூர்வீககுடிமக்களின் இன்றையநிலையைவெளிப்படுத்திநிற்கின்றது. அரசநிர்வாகம் சரியாகநடைமுறைப்படுத்தப்பட்டு,நிதிவசதிகள் தேவைப்படுபவர்களுக்குசரியாகச்சென்றடைந்தால் மட்டுமேபூர்வீககுடிமக்கள் அழிவுநோக்கியதமதுபயணத்தில் இருந்துமீளமுடியும்.
இயற்கையுடனானசங்கமிப்புஎன்றவாழ்வியல் வேதாந்தத்துடன் வாழ்ந்தஒருசமுதாயத்தின்நிலப்பரப்பில் ஐரோப்பியர்கள் விதைத்தகொள்ளுபற்றைக் காடுகளாகிவிட்டது.


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *