அன்னைபூபதியின் நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற ஏற்பாடு!

Facebook Cover V02

annaiதமிழர் உரிமையை வலியுறுத்தியும் இந்திய அமைதி காக்கும் படையினரின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் உண்ணா விரதமிருந்த நிலையில் உயிர் நீத்த அன்னை பூபதியின் 29வது நினைவு கூரல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு – நாவலடியில் உள்ள அவரது கல்லறையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அன்னை பூபதியின் உறவினர்களால் சமாதிக்கு மாலையணிவிப்பு, மலரஞ்சலி, நினைவுச் சுடரேற்றல், அகவணக்கம் மற்றும் நினைவுரைகள் என்பன இடம்பெறவுள்ளன.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் நீராகாரம் மட்டும் அருந்தி சுமார் 5 வார காலம் உண்ணா விரதமிருந்த அன்னை பூபதி 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி உயிர் நீத்தார்.

தமிழ் மக்களின் உரிமை மற்றும் இந்திய சமாதானப் படையினரின் அடாவடித் தனங்கைளை நிறுத்துமாறு வலியுறுத்தி அவர் அஹிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையிலேயே உயிர் நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment