உலகின் பெரிய சூரிய ஒளி பூங்கா!

ekuruvi-aiya8-X3

Tamil_News_large_1859332_318_219உலகின், மிகப்பெரிய சூரிய ஒளி மின் பூங்கா இருப்பது, துபாயில் தான். அங்குள்ள, ‘முகமது பின் ரசீத் அல் மக்தோவும் சூரிய பூங்கா’வின் மின் உற்பத்தித் திறன், 2030 வாக்கில் 5,000 மெகாவாட்டாக உயர்த்த, துபாய் அரசு திட்டமிட்டு உள்ளது.இதற்கென, சமீபத்தில், 700 மெகாவாட் மின் உற்பத்தித் திறனைக் கூட்டவும், 853 அடி உயர, சூரிய ஒளி வாங்கி கோபுரத்தை கட்டவும், துபாய் அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஏற்கனவே அங்கு 23 லட்சம் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு, 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய திட்டத்தின்படி சூரிய ஒளியை லென்சுகள் மூலம் பிரதிபலித்து, ஒரு கோபுரத்தின் மீது குவியப்படுத்த உள்ளனர். கோபுரத்தில் படும் அதிக வெப்பத்தைக் கொண்டு ஒரு திரவத்தை ஆவியாக்குவர்.

அந்த ஆவியின் உந்து விசையில் டர்பைன்களை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்வர். வரும் ஆண்டுகளில், மின் உற்பத்திக்கு பெட்ரோலிய பொருட்களின் பயனை வெகுவாகக் குறைக்க துபாய் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்த சூரிய மின் ஒளி தொழில்நுட்ப முயற்சிகள் வெகுவாக உதவும்.

Share This Post

Post Comment