பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவோம்! – முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

ekuruvi-aiya8-X3

viknesharanபொலிஸ் அதிகாரத்தை மாகாணசபைக்கு வழங்கினால் வடக்கில் இடம்பெறும், குற்றச் செயல்களை முடிவுக்கு கொண்டு வருவோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். குடாநாட்டில் வன்முறைகள் மற்றும் வாள்வெட்டு கலாசாரம் தலைதூக்கியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த வடமாகாண சபை எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

இராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின் பிரசன்னமும் வடக்கில் காணப்படுவதாலும் சிங்களப் பொலிஸார் இங்கு பணிக்கமர்த்தப்பட்டுள்ள நிலையிலும் அதிகாரம் எங்களுடைய கைகளில் இல்லை. ஆயிரக்கணக்கான இராணுவம், கடற்படை என்பன இங்கு குவிக்கப்பட்டிருந்தும் கூட இவ்வாறான பிரச்சினைகள் இங்கு தொடர்கின்றன என்றால் இங்கு ஏதோ ஒன்று நடக்கின்றது. ஏதோ ஒரு இடத்தில் பிரச்சினை இருப்பதுபோல் எமக்குத் தெரிகின்றது.

வடக்கிலுள்ள இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு பொலிஸ் அதிகாரங்கள் எமக்கு கிடைத்தால் யாழ் குடாநாட்டில் அரங்கேற்றி வரும் இவ்வாறான வன்முறைச் செயல்களை கட்டாயம் கட்டுப்படுத்திக் காட்டுவோம். அதில் எவ்வித சந்தேகமுமில்லை வடக்கில் படையினரை முடக்கி வைப்பதால் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர முடியாது. ஆகவே படையினரை வ6டக்கிலிருந்து முற்றாக வெளியேற்ற வேண்டும் என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்கசின்றோம்.

ஏனென்றால் தற்பொழுதும் படையினர் முகாமுக்குள் முடங்கி இருப்பதாகத்தான் கூறுகின்றார்கள். ஆனால் நாளாந்தம் ஆறு, ஏழு இராணுவத்தினர் சைக்கிளில் உலா வருகின்ற நிலைமை தொடர்கின்றது. இதனால் பொதுமக்கள் இன்னும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.ஆகவே முடக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருக்கின்றேன். என்னுடைய மாணவனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரவிராஜை சுட்டுக்கொன்று விட்டு சுட்டவர்கள் இராணுவ முகாமுக்குள் திரும்பி விட்டனர் என்றும் முதலமைச்சர் கூறினார்.

Share This Post

Post Comment