ஓவியாவிற்கு பொலிஸார் அழைப்பாணை

finalthemo

Actress-oviyaதனியார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்வொன்றில் பங்குபற்றியிருந்த நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அது தொடர்பில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு பொலிஸ் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்ச்சியின்போது நடிகை ஓவியா தற்கொலைக்கு முயற்சித்தாக பூந்தமல்லி நசரத்பேட்டை பொலிஸ் நிலையத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் ஏற்கனவேயும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பி;ல் விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால, இது தொடர்பில் நடிகை ஓவியாவின் உதவியாளருடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு பேசியபோது, ‘ஓவியா தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை’ என்று அவர் மறுத்துள்ளார்.

Share This Post

Post Comment