திருச்சி அருகே தயாரிக்கப்பட்ட போலி மது தமிழகம் முழுவதும் விற்பனை

ekuruvi-aiya8-X3

fake-liquor-produced-near-Trichy-selling-acrossதிருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளுர் ஊராட்சி ஆனைப்பட்டி கிராமத்தில் பாய் தயாரிக்கும் தொழிற்சாலை எனக்கூறி அங்கு போலியான மது தயாரிக்கப்படுவதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து மது விலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நடராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வனிதா, பாலமுருகன், இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் பாய் மில் தொழிற்சாலையில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு போலி மது தயாரிக்கப்படுவது தெரியவந்தது. பல்வேறு இடங்களுக்கு கேன்களில் அனுப்பி வைக்கப்பட இருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 எரிசாராய கேன்கள், அவற்றை அடைத்து விற்க வைக்கப்பட்டிருந்த பாட்டில்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

போலி மது தயாரிக்கப்பட்ட பாய் மில் தொழிற்சாலை

போலி மது தயாரிக்க வைக்கப்பட்டிருந்த ரசாயன பொருட்கள், போதை ஏற்படுத்தும் மாத்திரைகள், மதுபாட்டில்களில் அரசு டாஸ்மாக் நிறுவன போலி ஸ்டிக்கர்கள், ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

இந்த போலி மது தொழிற்சாலையை நடத்திய உமையாள்புரம் குமார் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். குமார் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முசிறி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றியுள்ளார்.

அதன்பிறகு இங்கு பாய் தயாரிக்கும் மில்லை தொடங்கி நடத்தினார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போலி மது தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இங்கு தயாரிக்கப்படும் போலி மது யார் யார் மூலம் எங்கு சப்ளை செய்யப்படுகிறது. கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறதா? தனியார் ஓட்டல்களில் விற்கப்படுகிறா? பார்களுக்கு அனுப்பப்படுகிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமயபுரம் அருகே போலி மது கடத்தி சென்ற லாரி எரிசாராயத்துடன் பிடிபட்டது. இது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை திருச்சி போலீசார் கைது செய்தனர். அவர் மீது 20-க் கும் மேற்பட்ட மதுபான கடத்தல் வழக்கு இருப்பது தெரிய வந்தது.

இந்த போலி மது தயாரித்து விற்பதன் மூலம் கோடிக்கணக்கில் சிலர் பணம் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

முக்கிய பிரமுகர்களை பிடிக்கவும் இதில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்கவும் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முன்னாள் டாஸ்மாக் ஊழியர் குமாரின் செல்போன்களுக்கு வந்த போன் நம்பர்கள், மற்றும் அவரது போலி மது ஆலையில் வேலை பார்த்த ஊழியர்கள் நம்பர்கள் ஆகியவற்றை திரட்டி விசாரணை நடந்து வருகிறது.

எரிசாராயத்தில் கலர் உருவாக கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. மேலும் போதை ஏறுவதற்காக மாத்திரைகளும் கலக்கப்படுகிறது. இதை குடித்தால் கண் பார்வை பறிபோகும். உடல் உறுப்புகள் செயல் இழக்கும். குடித்தவுடன் போதை ஏறுவது போல் ஏறி சில மணி நேரங்களில் போதை இறங்கி விடும். இதுபோன்ற போலி மது முகர்ந்து பார்க்கும் போது ஒருவித எரிச்சல் ஏற்படும். போலி குவார்ட்டர் மது ரூ.10-க்கு தயாரிக்கப்பட்டு ரூ.100, ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share This Post

Post Comment