போக்குவரத்து விதி முறைகளை மீறுவோருக்கான தண்டப்பண அறவீட்டில் மாற்றம் – சாகல ரத்னாயக்க

traffic-policeவீதி ஒழுங்குமுறைகளை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பரீட்சித்து பார்க்கவுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையால் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர் போக்குவரத்து விதி முறைகளை மீறும் சமயத்தில் எடுக்கப்படும் புகைப்படத்துடன் குறித்த தண்டப்பண பத்திரிக்கை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

Share This Post

Post Comment