இலங்கையிலேயே முதலாவது பொய்யன் சம்பந்தன் – கருணா!

ekuruvi-aiya8-X3

karunaஇலங்கையிலேயே முதலாவது பொய் சொல்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே என கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கூட்டம் வவுனியா மாவட்டத்திலுள்ள கிடாச்சூரி எனுமிடத்தில் கருணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தராகி சிவராம் தன்னுடைய நண்பரெனவும், ஆயுதப் போராட்டமானது அரசியல் மயப்படுத்தப்படுவதற்கு ஒரு கட்சி உருவாக்கப்படவேண்டுமென்ற ஆலோசனையை அவரே தன்னிடம் முன்வைத்ததாகவும், பின்னர் தான் தேசியத்தலைவருடன் இவரின் ஆலோசனையைத் தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

அதற்கு தலைவர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இவர்கள் அனைவரும் துரோகியள் எனவும், இவர்கள் பல தடவைகள் எம்மை ஏமாற்றியவர்கள் எனவும் தெரிவித்தார். அதற்கு தான் அப்பியில்லையண்ண எங்கட ஆயுதப்போராட்டத்திற்கு இது ஒரு பலமாயிருக்கும் எனத் தெரிவித்ததாகவும் இதன் பின்னரே தலைவர் சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னரே அனைவரையும் அழைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் கருணா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னர் மக்களுக்குச் சம்பந்தனைத் தெரியாதெனவும் இவர் 15 தடவைகளுக்குமேல் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தவர் எனவும் தெரிவித்தார். விடுதலைப் புலிகளாலேயே அவர் தற்போது முடிசூடா மன்னனாகத் திகழ்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment