பிளாஸ்ரிக்கை நொறுக்குத் தீனியாக சாப்பிடும் தமிழ் சிறுவன்
Jun 27 2012 06:32:17

பிளாஸ்ரிக்  மண்ணை மாசுபடுத்தும் மிகக் கொடிய நச்சுப் பொருள் என உலக நாடுகள் பலவற்றிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு பரப்புரைகள் செய்து வரும் வேளையில் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்டத்தில் அரசு பாடசாலையொன்றில் பயிலும் மாணவன் ஒருவன் கடந்த நான்கு ஆண்டுகளாக, பிளாஸ்டிக்கை நொறுக்குத் தீனி போல் சாப்பிட்டு வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காரைக்கால், திருப்பட்டினம் மேலவீதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். இவரின் மகன் சாக்ரடீஸ். 14 வயதாகும் இந்தச் சிறுவன் திருப்பட்டினம் அரசு பாடசாலையில்  ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவரின் தந்தை, கூலி வேலை செய்து வருகிறார். சாக்ரடீஸ், கடந்த 10 நாட்களாக, காரைக்கால் அண்ணா கல்லூரியில் நடந்து வந்த தேசிய நலப்பணித்திட்ட முகாமில் கலந்து கொண்டான். 

பிளாஸ்ரிக் அளவுகோல் மற்றும் வேறு சில சிறிய பிளாஸ்ரிக் பொருட்களை சாக்ரடீஸ் சாப்பிடுவதை முகாமில் உள்ள பிற மாணவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன்  இதனை சக மாணவர்கள் தேசிய நலப்பணித்திட்ட அதிகாரிகளிடமும் தெரிவித்தனர். முகாமிலிருந்த மருத்துவக் குழுவினர் மாணவனை உடனடியாக பரிசோதனை செய்த போது பிளாஸ்ரிக் சாப்பிடுவதால், மாணவனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரிந்தது. மாணவனை விசாரித்ததில், அவன் நான்கு ஆண்டுகளாக, பிளாஸ்ரிக் பொருட்களைச் சாப்பிட்டு வருவதாகக் கூறினான்.

இதுகுறித்து, மாணவனின் தந்தை ஆபிரகாமிடம் கேட்ட போது , "பல முறை தடுத்தும், தொடர்ந்து பிளாஸ்ரிக் பொருட்களை சாப்பிட்டு வருகிறான்' என்றார். 

பிளாஸ்ரிக் சாப்பிட்டால், உயிருக்கு பேராபத்து ஏற்படும்.  இனி பிளாஸ்ரிக் சாப்பிடக் கூடாது என ஆசான்களும், தேசிய நலப்பணித்திட்ட அதிகாரிகளும், சாக்ரடீசை கண்டித்தனர். ஆசான்களின் கண்டிப்பிற்குப் பின்னர் மனம் திருந்திய மாணவன் சாக்ரடீஸ் கூறியதாவது :

நான், ஐந்தாம் வகுப்பு பயிலும் போதே, அளவுகோல் உட்பட சில பிளாஸ்ரிக் பொருட்களைச் சாப்பிட்டு வந்தேன். எனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பிளாஸ்ரிக்கை சாப்பிடுவதால் உயிருக்கு ஆபத்து என பலர் பயமுறுத்தினர். அதனால், இனிமேல் பிளாஸ்ரிக்கை சாப்பிடக் கூடாது என முடிவு செய்துள்ளேன். இனி, பிளாஸ்ரிக் பொருட்களை சாப்பிட மாட்டேன். இவ்வாறு சாக்ரடீஸ் உறுதி கூறினான்.

மாணவன்  சாக்ரடீஸ் மேலும் பல மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Jul 12 2012 05:42:36 [India]
சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் ஆவி உலவுவதாக மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. சென்னை ஆவடி காமராஜர் நகர் ஆற்றங்கரை தெரு ஓரத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. அமாவாசை தினம் நெருங்கும் போது

Read More >

Jun 27 2012 06:32:17 [India]
பிளாஸ்ரிக் மண்ணை மாசுபடுத்தும் மிகக் கொடிய நச்சுப் பொருள் என உலக நாடுகள் பலவற்றிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு பரப்புரைகள் செய்து வரும் வேளையில் இந்தியாவின்

Read More >

Jun 13 2012 19:58:07 [India]
தலைமறைவாகி கர்நாடக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மஜிஸ்ரேட் நீதிமன்றில் சரணடைந்தார். சரணடைந்த நித்யானந்தாவை ஒரு நாள் நீதிமன்றக் காவலில்

Read More >

Jun 05 2012 20:19:35 [India]
அகோர வெய்யிலினால் ஆந்திர மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 148 பேர் பலியாகி உள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் சுட்டெரி த்தது. இதில் காக்கிநாடா, துணி ஆகிய மண்டலங்களில் 36

Read More >

May 31 2012 06:39:43 [India]
உலக செஸ் போட்டியில் இந்திய வீரரான விஸ்வநாதன் ஆனந் இம்முறையும் சாம்பியன் பட்டத் தினை வென்றுள்ளார். ஏற்கனவே 2000, 2007, 2008, 2010 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் சாம்பியனாக வந்த இவர் இம்முறை

Read More >

May 23 2012 07:11:21 [India]
இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று முடிவடைகிறது. அதற்கு மறுநாள் புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் அதிகாரி யாக செயல்படவிருக்கும் ராஜ்யசபா செகரட்டரி

Read More >

May 01 2012 15:09:17 [India]
மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியாக பல குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளான, பற்றுக்களைத் துறக்காத இளவயதினரான நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் அனைத்தும் அதிருப்தியும், ஆத்திரமும்

Read More >

Apr 03 2012 07:00:06 [India]
தமிழகத்தில் 60,000 வருட பழமையான மனிதன் ! இந்தியா என்னும் துணைக் கண்டத் தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. மதுரை

Read More >

Apr 01 2012 04:36:29 [India]
இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

Read More >

Mar 19 2012 11:02:54 [India]
ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணையின் விவரம் முழுமையாக தெரியவில்லை என்றும் அதைப் படித்து விட்டு ஆதரித்து வாக்களிக்க இந்தியா ஆர்வமாக உள்ளது என இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read More >