தெற்கு சூடானில் ஏரியில் விமானம் விழுந்து விபத்து – 17 பேர் பலி

South-Sudan-10தெற்கு சூடான் நாட்டின் தலைநகர் ஜூபா. அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம், பயணிகளை ஏற்றிக் கொண்டு, யிரோல் நகருக்கு நேற்று புறப்பட்டு சென்றது.

விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அந்த விமானம் அங்கு உள்ள ஒரு ஏரியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக பின்னர் தெரிய வந்தது.

இந்த விபத்தில் 17 பயணிகள் பலியாகி விட்டனர். அவர்களது உடல்கள், ஏரியில் இருந்து மீட்கப்பட்டு விட்டன.

6 வயது குழந்தை உள்பட 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அங்கு இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஐரோப்பியரான ஒருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.


Related News

 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
 • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
 • அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *