கொழும்பு வருகிறார் பிரித்தானிய அமைச்சர்!

Facebook Cover V02

Baroness-Anelayஐநா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரேனஸ் அனெலி நாளை மறுநாள் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

முதன்முறையாக சிறீலங்காவுக்குப் பயணம் செய்யும் அவர் எதிர்வரும் 9ஆம் திகதிவரை சிறீலங்காவில் தங்கியிருப்பார் எனவும், இக்காலப்பகுதியில் அவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் எனவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.

அவரின் பயணத்தின்போது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், ஊழலுக்கெதிராக சிறீலங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கும் பிரித்தானியாவின் ஆதரவை அமைச்சர் வெளியிடவுள்ளார்.

மேலும், இந்த விடயங்கள் தொடர்பாக அவர் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிவிவகார அமைச்சர் மங்களசரமவீர ஆகியோருடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

யாழ்ப்பாணம் பயணம் செய்யவுள்ள அவர், அங்கு வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

அத்துடன், கலோரெஸ் அமைப்பினால் கண்டிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் குடியேறிய மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

Share This Post

Post Comment