மோடி பிரதமரானதன் பின்னர் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தாக்குவதில்லை

ekuruvi-aiya8-X3

BJPநரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை தாக்குவதில்லை என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்தில் சுமார் 600 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நரேந்திர மோடி பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கைக் கடற்படையினரால் எந்தவொரு தமிழ் மீனவரும் கொல்லப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிமுக மற்றும் திமுகவின் ஊழல் மோசடிகளினால் தமிழக ஆட்சி நிர்வாகம் பாரியளவில் சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share This Post

Post Comment