தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பில் சிறீலங்கா அர்ப்பணிப்புடன் செயற்படும்

ekuruvi-aiya8-X3

maithiri1555தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பில் சிறீலங்கா மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டுடனான உறவானது இன்னொரு நாட்டின் மீது எந்தவிதமான மோசமான தாக்கத்தையும் கொண்டிருக்கக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையிலேயே வெளிநாட்டுக் கொள்கைகள் அமைந்திருப்பதாகவும் சிறீலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் சிறீலங்காவின் அதிபர் மாளிகையில் ஜேர்மன் நாடாளுமன்றக் குழுவினரைச் சந்தித்தபோது, சிறீலங்காவின் வெளிநாட்டுக்கொள்கைகள் மற்றும் அயல் நாட்டு உறவுகள் தொடர்பில் ஜேர்மன் குழு கேள்வியெழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது சிறீலங்காவின் அபிவிருத்திக்கு பல தசாப்தங்களாக உதவிகளை வழங்கிவரும் ஜேர்மன் நாட்டினருக்கு நாடாளுமன்றக் குழுவினரிடம் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இதன்போது ஜேர்மன் குழுவினர் மேலதிக உதவிகள் தேவைப்படும் துறைகளைக் கேட்டபோது தொழில்நுட்பப் பயிற்சி, நீர் சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரக ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் திட்டங்களுக்கு வெளிநாட்டு உதவிகள் தேவையென சிறீலங்கா அதிபர் தெரிவித்தார்.

நாட்டின் நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தியைப் பலப்படுத்துவதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக ஜேர்மன் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment