பௌத்த பிக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர் ஒருவரின் அவசியம் எழுந்துள்ளது – ஞானசார தேரர்

Thermo-Care-Heating

gnanasara1233பௌத்த பிக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர் ஒருவரின் அவசியம் எழுந்துள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஏனைய மதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பௌத்த மதத்தில் வலுவான தலைவர்கள் எவரும் இல்லாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த பீடங்களுக்கு தலைவர்கள் இருக்கின்றாகள் என்ற போதிலும் பௌத்த மதத்தை வழிநடத்த தலைவர்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி பௌத்தராக காணப்படுகின்ற போதிலும் அது ஒர் பெயரளவு விடயமாகவே கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மத விவகாரங்களுக்கு பொறுப்பானவர்கள் அமைதி காத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிறிஸ்தவ கடும்போக்காளர்கள் இலங்கை பௌத்தர்கள் மீது பிரயோகித்து வரும் அழுத்தங்கள் தொடர்பில் பேசுவதற்கு எவருமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment