பிரகீத் கடத்தல் சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார்- ஜெகத் ஜெயசூரிய

ekuruvi-aiya8-X3

Gen.-Jayasuriyaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவருமான ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய.

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டது தொடர்பாக சாட்சியமளிக்க வருமாறு குற்றப்புலனாய்வுத்துறையினர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன், அரசாங்க செலவில், அவர் சிறிலங்கா வந்திருப்பதாக அறிந்தே, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இந்த அழைப்பை விடுத்திருந்தனர்.

அதற்கு ஜெனரல் ஜெயசூரிய, “நான் விடுமுறையில் தான் சிறிலங்கா வந்துள்ளேன். எனது விடுமுறை நாட்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் செலவிட்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

எனது வாக்குமூலம் தேவையென்றால், அரச செலவில் விமானச் சீட்டு ஒன்றை அனுப்பி வையுங்கள். வழக்கத்தில் நான் முதல் வகுப்பில் அல்லது வணிக வகுப்பிலேயே பயணம் செய்வேன்.

அத்துடன் குற்றப்புலனாய்வப் பிரிவு தலைமையகம் அருகேயுள்ள விடுதி ஒன்றிலும் அறைறை முன்பதி்வு செய்யுங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்திலயே பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு உயரதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment