டூயல் பிரைமரி கமரா கொண்ட ஹானர் 7X ஸ்மார்ட்போன்

ekuruvi-aiya8-X3

Honor-7X-With-Dual-Rear-Cameras-Launchedஹூவாய் ஹானர் பிரான்டு கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஹானர் 7X ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் 7X ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் ஹானர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். புதிய ஸ்மார்ட்போன் 18:9 டிஸ்ப்ளே மற்றும் மூன்று வித மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹானர் 7X ஸ்மார்ட்போனின் 32 ஜிபி மாடல் CNY 1299 அதாவது இந்திய இந்திய மதிப்பில் ரூ.12,890, 64 ஜிபி CNY1,699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,850 மற்றும் 128 ஜிபி CNY 1999 அதாவது இந்திய மதிப்பில் ரூ.19,820 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரோரா பிளாக், கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் ஹானர் 7X விற்பனை சீனாவில் அக்டோபர் 17-ம் தேதி துவங்குகிறது.

ஹானர் 7X சிறப்பம்சங்கள்:

– 5.93 இன்ச் ஃபுல் எச்டி, 1080×2160 பிக்சல் வளைந்த டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 3659 பிராசஸர்
– 4 ஜிபி ரேம்
– 32 / 64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 16 எம்பி + 16 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– 3340 எம்ஏஎச் பேட்டரி

முழுமையான மெட்டல் வடிவைப்பு கொண்ட புதிய ஹானர் 7X ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த EMUI 5.1 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் பின்புறம் கைரேகை ஸ்கேனர் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஹானர் 7X ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் விற்பனைக்கு வருவது சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.

Share This Post

Post Comment