விமல் வீரவன்சவின் பிள்ளைகள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Thermo-Care-Heating

vimal-familyஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவின் பிள்ளைகள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க வாகனங்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதனால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பிள்ளைகள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் விமல் வீரவன்சவின் மகனும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் எனவும் வீரவன்சவின் மகன் நேற்று மாலை வீடு திரும்பிய போதிலும், அவரது மகள் ராகம வைத்தியசாலையிலிருந்து, லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விமல் வீரவன்சவின் மகள் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment